×

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் பற்றிய புகார் தெரிவிக்கலாம்: காவல்துறை அறிவிப்பு

புதுக்கோட்டை, ஜூலை 29: புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் பற்றிய புகார் தெரிவிக்கலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்மந்தமான புகார் மற்றும் தகவலை, பொது மக்கள் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறைக்கு 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம். மேலும் தஞ்சாவூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டி.எஸ்.பிக்கு 8300021400 என்ற எண்ணிலும், புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை எஸ்.ஐக்கு 9578720791 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். புகார் மற்றும் தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் மற்றும் விபரம் ரகசியமாக வைக்கப்படும் என புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் பற்றிய புகார் தெரிவிக்கலாம்: காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Pudukkottai district ,Pudukkottai ,Dinakaran ,
× RELATED காண்டாமிருக கொம்பு விற்க முயன்ற 3 பேர் கைது: திருமயம் வனத்துறை அதிரடி