×

₹39 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்

தேன்கனிக்கோட்டை, ஜூலை 29: தளி அருகேயுள்ள சாத்தனூர் முதல் பின்னமங்கலம் கிராமம் வரை, தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ், ₹30லட்சம் மதிப்பில் ஜல்லி சாலை அமைக்கும் பணி, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பின்னமங்கலம் கிராமத்தில் ₹9லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து பணிகளை ெதாடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய கவுன்சிலர் பிரசாந்த், ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

The post ₹39 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் appeared first on Dinakaran.

Tags : THENKANIKKOTA ,JALLI ROAD ,SATANUR ,PINAMANGALAM VILLAGE NEAR TALI ,PINMANGALAM VILLAGE ,Dinakaran ,
× RELATED ஓசூர் அடுத்த சாத்தனூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது