×

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை உதவியாளர்கள் 28 பேர் அதிரடியாக பணியிட மாற்றம்

 

கள்ளக்குறிச்சி, ஜூலை 29: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றி வரும் உதவியாளர்கள், ஊர்நல அலுவலர் நிலை-1, கணக்கர்கள் என மொத்தம் 28 பேரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.  கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் கணக்கராக (பொது) சவுந்தர், திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் கணக்கராக (பொது) செல்வமணி, உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கணக்கராக (பொது) சசிக்குமார், கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் கணக்கராக (திட்டம்) ஆனந்த்,

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் கணக்கராக (பொது) முத்துசாமி, கள்ளக்குறிச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உதவியாளராக அன்புவேலன், சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம் உதவியாளராக சரண்ராஜ், கள்ளக்குறிச்சி உதவி இயக்குநர் (தணிக்கை) உதவியாளராக புவனேஷ்வரி, கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் ஊர்நல அலுவலராக நிலை-1 அம்பிகா, திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய ஊர்நல அலுவலராக நிலை-1 அப்துல்ஹாருன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவியாளராக ரவிவர்மராஜ், திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் கணக்கராக (திட்டம்) ஷமிமுன்னிசா, திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் கணக்கராக (பொது) அரிகிருஷ்ணன், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய உதவியாளராக ஜான்மேரி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியம் உதவியாளராக ஆறுமுகம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய ஊர்நல அலுவலராக நிலை-1 பௌலின்நிர்மலா, ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் உதவியாளராக தாட்சாயணி, திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் ஊர்நல அலுவலராக நிலை-1 திருமலை, கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியம் ஊர்நல அலுவலராக நிலை-1 பரமசிவம், சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் உதவியாளராக தங்கராஜ், சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம் உதவியாளராக கார்த்திகேயன்,

சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம் கணக்கராக (திட்டம்) கிருஷ்ணவேணி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சி) உதவியாளராக மகேஸ்வரி, ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் கணக்கராக (திட்டம்) அமுதா, சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் ஊர்நல அலுவலராக நிலை-1 உஷா, திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் ஊர்நல அலுவலராக நிலை-1 அம்சா, உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஊர்நல அலுவலராக நிலை-1 செல்வி, உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஊர்நல அலுவலராக நிலை-1 சுரேந்தர் ஆகிய
28 பேரை நியமனம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

The post கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை உதவியாளர்கள் 28 பேர் அதிரடியாக பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Kallakurichi district ,Kallakurichi ,District Collector ,Prashant ,Kallakurichi Panchayat Union ,Kallakurichi District Rural Development Department ,Dinakaran ,
× RELATED மின் வாரிய அலுவலகத்தில் புகுந்து இளைஞர்கள் ரகளை