- வரமுன் கப்போம் திட்டம்
- மருத்துவ முகாம்
- மேலூர்
- வருமுன்
- கட்டையாம்பட்டி சமுதாயக் கூடம்
- வேப்படப்பு பஞ்சாயத்து
- தின மலர்
மேலூர், ஜூலை 29: மேலூர் அருகே கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் ரத்த தான முகாம் நடைபெற்றது. மேலூர் அருகே வேப்படப்பு ஊராட்சியில் உள்ள கட்டையம்பட்டி சமுதாய கூடத்தில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ துறை துணை இயக்குநர் குமரகுருபரன் ஆலோசனையில் கீழ் நடைபெற்ற இம்முகாமிற்கு, மேலூர் வட்டார மருத்துவ அலுவலர் அம்பலம் சிவனேஷ் தலைமை வகித்தார். வேப்படப்பு ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து குத்துவிளக்கு ஏற்றி முகாமினை துவக்கி வைத்தார்.
முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு இசிஜி, ஸ்கேன், கண், பல் மருத்துவம், தோல் நோய், சர்க்கரை நோய்கான நீர், ரத்த பரிசோதனை, காசநோய் கண்டறிதல் போன்றஎபரிசோதனைகள் நடைபெற்றது. முகாமில் ஆண்கள் 445, பெண்கள் 637 என மொத்தம் 1082 நபர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதனைத்தொடர்ந்து மதுரை ராஜாஜி மருத்துவமனையின் நடமாடும் ரத்த ஊர்தியில், பொதுமக்கள் 19 பேர் ரத்த தானம் செய்தனர்.
The post மேலூர் அருகே கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.