- ஈரோடு
- EVN சாலை ஸ்டோனி பாலம்
- கருங்கல்பாளையம் காவிரி ரோடு
- நாகப்பட்டினம்
- ராமேஸ்வரன்
- காரைக்கால்
- தூத்துக்குடி
- கேரளா
- கர்நாடக
ஈரோடு, ஜூலை 29: ஈரோடு மாநகரில் ஈவிஎன் சாலை ஸ்டோனி பாலம் மற்றும் கருங்கல்பாளையம் காவிரி சாலையில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு நாகப்பட்டினம், ராமேஸ்வரன், காரைக்கால், தூத்துக்குடி மற்றும் கேரளா, கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்து அதிக அளவில் கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
வாரந்தோறும் 10 முதல் 15 டன்கள் வரை மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மாதா கோயில் திருவிழா காரணமாக அம்மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டிற்கு சுமார் 3.5 டன் அளவிற்கே பிற பகுதிகளில் இருந்து மீன்கள் வரத்தானது. இதனால் அனைத்து கடல் மீன்களின் விலையும் உயர்ந்தது. கிலோவுக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை உயர்ந்து விற்பனையானது.
ஈரோடு ஸ்டோனிபாலம் மார்க்கெட்டில் நேற்று விற்பனையான மீன்களின் விலை நிலவரம் (கிலோவில்): வஞ்சிரம்-ரூ.1,200, வெள்ளை வாவல்-ரூ.1,000, கருப்பு வாவல்-ரூ.800, விளமீன்-ரூ.600, தேங்காய் பாறை-ரூ.600, மஞ்சள் பாறை-ரூ.550, இறால்-ரூ.600, மத்தி-ரூ.300, நெத்திலி-ரூ.350, சங்கரா-ரூ.400, நகர-ரூ.500, அயிலை-ரூ.350, ஊளி-ரூ.600, நண்டு-ரூ.450க்கும் விற்பனையானது. அணை மீன்களான லோகு, கட்லா ஆகியன கிலோ ரூ.180க்கும், பாறை ரூ.170க்கும், நெய் மீன், ஜிலேபி மீன் ஆகியன ரூ.150க்கும் விற்பனை செய்யப்பட்டது.
The post ஈரோட்டில் மீன்களின் விலை உயர்வு appeared first on Dinakaran.