×

உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு உதவி மையம்

 

பொன்னேரி, ஜூலை 29: தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் விநியோகம் செய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு உதவி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு உதவி முகாம் கடந்த 27ம் தேதி முதல் வருகிற 5ம் தேதி வரை, காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை கிக் (GIG) தொழிலாளருக்கான பதிவு, 58, சிந்தூர் நகர், தடப்பெரும்பாக்கம், கொக்கு மேடு பேருந்து நிலையம், பொன்னேரி தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

தொழிலாளர்கள் ஆதார் அட்டை, மின்னணு குடும்ப அட்டை, பிறந்த தேதிக்கான ஆவணம், பள்ளிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இந்த ஆவணங்களை எடுத்து வந்து நேரில் சமர்ப்பித்து பதிவு செய்து தொழிலாளர்கள் நலவாரியத்தில் புதுப்பித்துக் கொள்ளவும் என பொன்னேரி சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர்செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

The post உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு உதவி மையம் appeared first on Dinakaran.

Tags : Manual Workers Welfare Board ,Ponneri ,Tamil Nadu Manual Workers Welfare Board and Distribution Workers Welfare Board ,Dinakaran ,
× RELATED பொன்னேரி அருகே இயற்கை எரிவாயு குழாயில் உடைப்பு..!!