கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பட்டப்படிப்புகளுக்கு பொதுப்பிரிவு மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டில் உள்ள காலியிடங்களுக்கு நேரடி கலந்தாய்வு நடக்கிறது. இந்த கலந்தாய்வு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் நாளை (30ம் தேதி) நடக்கிறது. இதன் மூலம் 171 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. நேரடி கலந்தாய்வில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அவர்களது மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணிற்கு தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.
மேலும், மின்னஞ்சலில் கல்லூரி வாரியாக உள்ள காலியிடங்களுக்கான அட்டவணையும் இணைக்கப்பட்டுள்ளது. நேரடி கலந்தாய்வில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளின் பட்டியல் மற்றும் கல்லூரி வாரியாக உள்ள காலியிடங்களுக்கான அட்டவணையும் https://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நேரடி கலந்தாய்வில் பங்கேற்க தவறிய மாணவர்களுக்கு மறுபரிசீலனை செய்யப்படமாட்டாது. மாணவர் சந்தேகங்களுக்கு 94886-35077, 94864-25076 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
The post வேளாண் பல்கலைக்கழகத்தில் 7.5% இட ஒதுக்கீடுக்கு நாளை நேரடி கலந்தாய்வு appeared first on Dinakaran.