×

‘செல்லூர் ராஜூ ஒரு காமெடி பீஸ்’

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பேருந்து நிலையத்தில் புதிய போக்குவரத்து சேவையை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று தொடக்கி வைத்தார். விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், ‘‘ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விடுதி காப்பாளர், சமையலர் பணிகளுக்கு தேர்வு நடைபெற உள்ளது. 1,353 விடுதிகளில் 1,264 விடுதிகள் சொந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

ஆண்டுக்கு 9 புதிய சொந்த விடுதிகள் கட்டப்பட்டு வருகிறது’’ என்றார். இதனை தொடர்ந்து நிருபர்கள், ‘‘தமிழ்நாட்டில் டைம் பாஸூக்காக கொலைகள் நடைபெறுகிறது’’ என செல்லூர் ராஜு குற்றம் சாட்டியுள்ளாரே என்ற கேள்விக்கு, ‘‘செல்லூர் ராஜூ ஒரு காமெடி பீஸ்’’ என்று அமைச்சர் கூறினார்.

The post ‘செல்லூர் ராஜூ ஒரு காமெடி பீஸ்’ appeared first on Dinakaran.

Tags : Paramakkudy ,Minister ,Rajakannappan ,Paramakkudy Bus Station ,Ramanathapuram district ,Teachers' Selection Board ,
× RELATED எம்எல்ஏ நிதியில் கட்டப்பட்ட புதிய நாடக மேடை திறப்பு