×

இன்று பீகாருக்கு நாளை தமிழகத்திற்கு: ஜி.கே.வாசன் நம்பிக்கை

மதுரை: தமிழ் மாநில காங்கிரஸ் தென் மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம், மதுரையில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கட்சியை பலப்படுத்தும் நோக்கில் சீரமைப்பு பணிகள் நடக்கிறது. இதற்காக, தமிழகத்தில் உள்ள 50 சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். இன்று பீகாருக்கு நிதி ஒதுக்கீடு செய்த ஒன்றிய அரசு, நாளை தமிழகத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யும்’’ என்றார்.

The post இன்று பீகாருக்கு நாளை தமிழகத்திற்கு: ஜி.கே.வாசன் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Bihar ,Tamil Nadu ,GK Vasan ,Madurai ,Tamil State ,Congress ,Southern ,District ,2026 assembly elections ,
× RELATED இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை...