×

பாஜ முன்னாள் எம்பி மாஸ்டர் மாதன் மரணம்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் மாஸ்டர் மாதன் (92). இவர், கடந்த 1998 முதல் 2003 வரை நீலகிரி தொகுதி பாஜ எம்பியாக இருந்தார். மேலும், இவர் 5 ஆண்டுகள் பாஜ மாநில துணைத்தலைவராகவும் பொறுப்பு வகித்தார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள இளம் படுகர்கள் சங்க தலைவராகவும் இருந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் கோவையில் பிரஸ் காலனி பகுதியில் உள்ள பாலாஜி கார்டன் பகுதியில் வசித்து வந்தார்.

இந்நிலையில், வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். அவரது உடலுக்கு ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி ஜார்க்கண்ட் ஆளுநரும், தெலங்கானா மற்றும் புதுச்சேரி பொறுப்பு ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். மாஸ்டர் மாதனின் இறுதிச் சடங்குகள் நேற்று கோவையில் பிரஸ் காலனி பகுதியில் உள்ள பாலாஜி கார்டன் பகுதியில் நடந்தது.

The post பாஜ முன்னாள் எம்பி மாஸ்டர் மாதன் மரணம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Master Matan ,Ooty ,Master Mathan ,Nilgiri district ,Nilgiris ,Vice President ,Nilgiri district… ,Dinakaran ,
× RELATED பாஜ ஆளும் மபியில் பட்டபகலில் நடந்த...