×

நிதி ஆயோக்கில் அரசியல் தேவையில்லை: சொல்கிறார் ஜி.கே.வாசன்

கோவை: தமாகா கோவை மண்டல நிர்வாகிகள் கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. இதில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 2026ம் ஆண்டு தேர்தல் வியூகத்தின் அடிப்படையில் பொறுப்புகளில் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. நிதி ஆயோக்கில் அரசியல் தேவையில்லை.

பலமான தமிழகமும், வலிமையான பாரதமும் ஏற்பட பிரதமர் தலைமைக்கு தமிழக கட்சிகள் துணை நின்று வளமான தமிழகத்தை உருவாக்க 2026ல் வழிவகுக்க வேண்டும் என்பதுதான் எங்களின் வேண்டுகோள். சிறு தொழில்கள், கைத்தறி, விசைத்தறிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post நிதி ஆயோக்கில் அரசியல் தேவையில்லை: சொல்கிறார் ஜி.கே.வாசன் appeared first on Dinakaran.

Tags : Niti Aayog ,GK Vasan ,Coimbatore ,Tamaga Coimbatore ,Niti Aayog.… ,Dinakaran ,
× RELATED சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும்: ஜி.கே.வாசன், டிடிவி வலியுறுத்தல்