×

சுவர் இடிந்து ஒப்பந்த ஊழியர் பலி

பெரம்பூர்: திருவிக நகர் மண்டலம், 73வது வார்டு நியூ பேரன்டஸ் சாலையில் மாநகராட்சி பொதுக் கழிப்பிடம் உள்ளது. இது பாழடைந்து கிடந்ததால், கட்டிடத்தை இடிக்கும் பணியில் மாநகராட்சி சார்பில் தனியார் நிறுவனம் ஈடுபட்டது. ஊழியர் குமார் டிரில்லிங் மிஷினை வைத்து சுவரை இடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து விழுந்து குமார் பரிதாபமாக உயிரிழந்தார். ஓட்டேரி போலீசார் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான குமார் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர். காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

The post சுவர் இடிந்து ஒப்பந்த ஊழியர் பலி appeared first on Dinakaran.

Tags : PERAMPUR ,73RD WARD NEW PARENTUS ROAD, THIRUVIKA NAGAR ZONE ,EMPLOYEE KUMAR ,Dinakaran ,
× RELATED விளை நிலங்களை சேதப்படுத்தி வரும்...