- முதல் அமைச்சர்
- எல். ஏ கே. ஸ்டாலின்
- சென்னை
- முதலமைச்சர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஸ்ரீ. எம். கே. ஸ்டாலின்
- நாகப்பட்டினம்
- வேலூர்
- திருப்பூர்
- தூத்துக்குடி
- மதுரை
- மு. கே. ஸ்டாலின்
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (27.07.2024) தலைமைச் செயலகத்தில், “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து ஆய்வுகூட்டம் மேற்கொண்டதோடு. காணொலி வாயிலாக நாகப்பட்டினம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, மதுரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடி முகாம் ஏற்பாடுகள் குறித்தும், பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் மற்றும் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் குறித்து பயனாளிகளிடமும் கேட்டறிந்தார்.அரசு துறைகளை தொடர்பு கொள்ளும் பொது மக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி, வெளிப்படைத்தன்மையினை அதிகரித்து அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்றுசேரும் வகையில் “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம் முதலமைச்சர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் முதல்வரின் முகவரித்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.முதற்கட்டமாக, பொதுமக்கள் அதிகமாக பயன்பெறும் 13 அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் கோரிக்கைகளை பெறும் வண்ணம் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், நகர்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் “மக்களுடன் முதல்வர்” திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டம் முதலமைச்சர் அவர்களால் 18.12.2023 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டு, பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சுமார் 2058 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் விரைவாக பரிசீலிக்கப்பட்டு உரிய பயன்கள் முறையாக பயனாளிகளுக்கு சென்று சேர்ந்துள்ளது. மேற்கண்ட முகாம்கள் வாயிலாகமொத்தம் 8,75 இலட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன
.
நகரப்பகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் பொதுமக்கள்பெருமளவில் பயன்கள் பெற்றதை தொடர்ந்து, ஊரகப்பகுதிகளிலும் “மக்களுடன்முதல்வர்” திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர்அவர்களால் 11.07.2024 அன்று தருமபுரி மாவட்டம், பாளையம்புதூர் ஊராட்சியில் தொடங்கிவைக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களில் உள்ளஊரகப்பகுதிகளில் 2,341 முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டு, தற்போது வரை861 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.ஊரகப் பகுதிகளில் மக்கள் பயன்பெறும் வகையில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அதிகளவில் அணுகும் அரசுத் துறைகளான, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை. எரிசக்தித் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, காவல் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை. பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடுத் துறை, வேளாண்மை-உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு. பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, கூட்டுறவுத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய 15 துறைகள் சார்ந்த கோரிக்கைகள் சிறப்பு முகாம்கள் மூலம் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகின்றன.”மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் ஆய்வுகூட்டம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து காணொலி வாயிலாக நாகப்பட்டினம், வேலூர், திருப்பூர். தூத்துக்குடி, மதுரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடி முகாம் ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்கள்.
முதலமைச்சர் அவர்கள் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் கேட்டறிந்த விவரங்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். மாவட்ட ஆடசித் தலைவர்களுடன், முகாமிற்கு மக்களுடைய வரவேற்பு எப்படி இருக்கிறது என்றும், முகாமிற்கு வருகை தந்துள்ள பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா என்றும், எத்தனை முகாம்கள் நடைபெற்றுள்ளன என்றும், இதுவரை நடைபெற்ற முகாம்களில் பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை குறித்தும், சராசரியாக ஒரு நாளைக்கு எத்தனை மனுக்கள் பெறப்படுகிறதுஎன்பது குறித்தும், அதிகமாக எந்தந்த துறைகளின் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்படுகிறது, முகாம்களில் எத்தனை கவுன்ட்டர்கள் மற்றும்கணிணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன போன்ற விவரங்களை கேட்டறிந்தார். “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் சிறப்பு முகாம்கள் நடைபெறுவது குறித்து பொதுமக்களுக்கு விளம்பரம் மூலம் எவ்வாறு தெரிவிக்கப்பட்டது குறித்தும்,முகாம்கள் காலை எத்தனை மணிக்கு தொடங்கப்படுகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
“மக்களுடன் முதல்வர்” திட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முதலமைச்சர் அவர்களுக்கு அளித்த விளக்கம்
திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கிறிஸ்துராஜ், இ.ஆ.ப.. அவர்கள். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும், முகாம் ஒன்றிற்கு சராசரியாக 900 மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார். மேலும், திருப்பூர் மாவட்டத்தில் 77 முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டு. 19 முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளது தெரிவித்தார். என்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ப. ஆகாஷ், இ.ஆ.ப.,அவர்கள். 19 கவுன்ட்டர்கள் கணிணி வசதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டு மனுக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன என்றும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 54முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டு. 18 முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டு,7400-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.நாளொன்றுக்கு சராசரியாக 400 முதல் 450 மனுக்கள் பெறப்பட்டு வருவதாகவும்,இதில் வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, மின்சார இணைப்பு பெயர்மாற்றம், மருத்துவ காப்பீட்டு அட்டை போன்றவற்றை கோரி அதிகமாக மனுக்கள்வருவாகவும் தெரிவித்தார்.மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.எம்.எஸ். சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள். முகாம்கள் காலை 9 மணிக்கு தொடங்கப்பட்டதாகவும், மதுரை மாவட்டத்தில் 73 முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டு, 15 முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டு, 6700 மனுக்கள் பெறப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி வி.ஆர். சுப்புலட்சுமி. இ.ஆ.ப.,அவர்கள். வேலூர் மாவட்டத்தில் 49 முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டு, 27முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டு, 21,654 மனுக்கள் பெறப்பட்டுள்ளது என்றுதெரிவித்தார். மேலும், நாளொன்றுக்கு சராசரியாக 800 முதல் 900 மனுக்கள் பெறப்பட்டு வருவதாகவும், மனுக்கள் அளிக்க வருகை தரும் பொதுமக்களுக்குதேநீர் மற்றும் பிஸ்கட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றும், அவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முதியோர் உதவித்தொகை, மின்சார இணைப்பு பெயர் மாற்றம், பட்டா மாறுதல், போன்றவற்றை கோரி அதிகமாக மனுக்கள் வருவாகவும் தெரிவித்தார்.தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஜி. லட்சுமிபதி, இ.ஆ.ப.அவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் 72 முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டு, 32முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டு, 26,468 மனுக்கள் பெறப்பட்டுள்ளது என்றுதெரிவித்தார். நாளொன்றுக்கு சராசரியாக 800 மனுக்கள் பெறப்பட்டு வருவதாகவும், இதில் இலவச வீட்டுமனைப் பட்டா. மனை உட்பிரிவு பெயர் மாற்றம், சாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ் கோரியும், மின்சார இணைப்பு பெயர் மாற்றம் போன்றவற்றை கோரி அதிகமாக மனுக்கள் வருவாகவும் தெரிவித்தார்.
“மக்களுடன் முதல்வர்” திட்ட செயல்பாடுகள் குறித்து அமைச்சர் திரு. மூர்த்தி அவர்கள் மற்றும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் விளக்கம்
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற முகாமில் கலந்து கொண்ட வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் திரு. பி. மூர்த்தி அவர்களிடம், முதலமைச்சர் அவர்கள். “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் முகாம் குறித்து மக்களிடம் விளம்பரப்படுத்தப்பட்ட விவரங்கள் குறித்தும், முகாம்களில் மக்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். அதற்கு அமைச்சர் அவர்கள், இத்திட்டம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கிராம கிராமமாக சென்று ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலமாக விளம்பரம் செய்யப்பட்டதாகவும், முகாம் நடைபெறும் விவரம் குறித்து சுவரெட்டிகள் மூலமாகவும் விளம்பரம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், முகாம்களில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் திரு.முகம்மதுஷாநவாஸ் அவர்கள் பேசும் போது, “மக்களுடன் முதல்வர்” திட்டமானது ஒருமகத்தான திட்டம் என்றும், கோரிக்கைகள் விரைந்து நிறைவேறுவதால் இந்த முகாம்களில் மக்கள் ஆர்வமாக கலந்து கொள்வதாகவும். தமிழ்நாடு இந்தியாவிற்கே முன்னோடியாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, நிர்வாகப்புரட்சி செய்து வருவதாகவும், அரசு அலுவலகங்களை நாடி மக்கள் சென்ற காலம்போய், மக்களைத் தேடி அரசு அலுவலர்கள் வருகை தந்து, மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள பத்து முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி பட்டியல் அனுப்பிட கேட்டுக் கொண்ட கோரிக்கையில்,தான் அனுப்பிய 5 கோரிக்கைகள் நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவித்துக்கொண்டார்.
“மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்களுக்கு வருகை தந்த பொதுமக்களிடம் முதலமைச்சர் அவர்கள் கலந்துரையாடிய விவரங்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முகாம்களுக்கு வருகைதந்த பொதுமக்களிடம் கலந்துரையாடியனார். அப்போது திருப்பூர்மாவட்டத்திலிருந்து திரு. சந்திரன் அவர்கள். மின்சார இணைப்பு பெயர் மாற்றத்திற்காக காலை 9 மணிக்கு வந்து மனு அளித்தாகவும். சிறிது நேரத்திலே பெயர் மாற்றம் செய்து அதற்கான உத்தரவினை வழங்கி விட்டதாகவும், மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்தார். காங்கேயத்தைச் சேர்ந்த திருமதி பரிமாளா அவர்கள். தையல் இயந்திரம் கோரி மனு அளித்தாகவும். உடனடியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டதாகவும். அதற்காக தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி ராஜலெஷ்மி அவர்கள், மருத்துவ காப்பீட்டு அட்டை கேட்டு இன்று காலை விண்ணப்பித்தாகவும், உடனே காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி திரு. முனியாண்டி அவர்கள், சக்கர நாற்காலி கோரி இன்று விண்ணப்பித்தாகவும். உடனடியாக தனக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டதாகவும், அதற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளி ஒருவர். பட்டா பெயர் மாற்றம் கோரி இன்று விண்ணப்பித்தாகவும், துரிதமாக தனக்கு பட்டா பெயர் மாற்றம் செய்யப்ப்பட்டு அதற்கான ஆணை வழங்கப்பட்டதாகவும், அதற்காக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். குடியாத்தத்தைச் சேர்ந்த மூளை முடக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பிரசன்னராஜின் தாயார் அவர்கள், தனக்கு மகனுக்கு சக்கர நாற்காலி கோரி விண்ணப்பித்தாகவும், சக்கர நாற்காலி உடனடியாக வழங்கப்பட்டதாகவும். அதற்கு தனக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி. ஸ்ரீதேவி, குலசேகரப்பட்டணத்தில் 560000) மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வருவதாகவும். அரசு உதவி பெறும் பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி பயின்றதாகவும், புதுமைப் பெண் திட்டம் பற்றி அறிந்து, தற்போது அத்திட்டத்தில் பயன்பெறுவதற்காக மனு அளிக்க வந்ததாகவும், இத்திட்டம் மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாகும். தன்னுடைய சக தோழிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும், இம்மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர், வருவாய் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் கோரி இன்று விண்ணப்பித்தாகவும், உடனடியாக இரண்டு சான்றிதழ்களும் கிடைத்து விட்டதாகவும், அதற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இம்மாவட்டத்தில் பட்டா மாற்றம் கோரி விண்ணப்பித்த திருமதி மதுபாலா அவர்கள், தனக்கு உடனடியாக பட்டா மாற்றம் செய்யப்பட்டுஅதற்கான ஆணை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து முதலமைச்சர் அவர்கள் கேட்டதற்கு, இத்திட்டம் மிகவும் பயனுள்ள திட்டமென்றும், தங்கள் பகுதி பெண்கள் இத்திட்டத்தால் மிகவும் பயனடைந்து வருவதாகவும், சிறப்பானதொரு ஆட்சி நடைபெற்று வருவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுக்கு. “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மூலம், மக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு கண்டு, உரிய பயன்கள் பயனாளிகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது, தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப.. கூடுதல் தலைமைச் செயலாளர் வளர்ச்சி ஆணையர் திரு. நா. முருகானந்தம். இ.ஆ.ப. முதல்வரின் முகவரித்துறை சிறப்பு அலுவலர் / முதன்மைச் செயலாளர் திருமதி பெ. அமுதா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post மக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.