×

பாஜக நிர்வாகி அருவருக்கத்தக்க மோசமான பதிவுகளை முகநூலில் பதிவிட்டு வருகிறார் : உயர்நீதிமன்றம் காட்டம்!!

மதுரை : மத மோதல்களை உருவாக்கும் விதமான பாஜக நிர்வாகியின் பதிவுகளை நீக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த அகமத் பயாஸ் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “ராமநாதபுரம் மாவட்டம் நம்புதலையைச் சேர்ந்த குருஜி என்பவர் பாஜக ஆன்மிக பிரிவு மாநில பொறுப்பாளர் ஆக இருந்து வருகிறார். தொண்டி பகுதியில் இந்து, இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் சகோதரர்களாக பழகி வருகிறார். அவர்களுக்கிடையே பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக குருஜி பேஸ்புக் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.குருஜி தொடர்ந்து மதக் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகவே செயல்பட்டு வருகிறார்.இஸ்லாமியர்களுக்கு எதிராக கீழ் தரமற்ற பேஸ்புக் பதிவுகளை வெளியிட்டு வரும் பாஜக நிர்வாகி குருஜி மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும்.’ இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “பாஜக நிர்வாகி அருவருக்கத்தக்க மோசமான பதிவுகளை முகநூலில் பதிவிட்டு வருகிறார். இதுபோன்ற மோசமான பதிவுகளை எவ்வாறு பதிவு செய்ய முடிகிறது?. இதுபோன்ற குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும். மத மோதல்களை உருவாக்கும் விதமான பாஜக நிர்வாகியின் பதிவுகளை நீக்க உத்தரவிடுகிறோம். சர்ச்சைக்குரிய புகைப்படங்களை நீக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.க்கு ஐகோர்ட் ஆணையிடுகிறது.

The post பாஜக நிர்வாகி அருவருக்கத்தக்க மோசமான பதிவுகளை முகநூலில் பதிவிட்டு வருகிறார் : உயர்நீதிமன்றம் காட்டம்!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Facebook ,High Court ,Madurai ,ICourt ,Court ,Ahmed Bias ,Thondi, Ramanathapuram district ,Ramanathapuram ,
× RELATED பாஜ நிர்வாகிக்கு ஐகோர்ட் கண்டிப்பு