சென்னை: சாவர்க்கர் குறித்த பேச்சுக்கு இயக்குநர் சுதா கொங்கரா விளக்கம் அளித்துள்ளார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குநர் சுதா கொங்கரா, சாவர்க்கர் பற்றி பேசியிருந்தார். அது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, சுதா கொங்கராவிற்கு எதிராக இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சாவர்க்கர் குறித்த பேச்சுக்கு இயக்குநர் சுதா கொங்கரா விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; என் தவறுக்கு வருந்துகிறேன். எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் பக்கத்தில் தவறுதான். எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன்.
மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன் என்று கூறியுள்ளார்.
The post ‘என் தவறுக்கு வருந்துகிறேன்’ – சாவர்க்கர் குறித்த பேச்சுக்கு இயக்குநர் சுதா கொங்கரா விளக்கம் appeared first on Dinakaran.