- வங்காள விரிகுடா
- சந்திப்பு அலுவலகம்
- சென்னை
- இந்திய வானிலையியல் துறை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
சென்னை: வங்கக்கடலில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் மேற்குவங்கத்தை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காலை உருவாகியுள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் நிலவி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 7 முதல் 11 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இன்று மஞ்சள் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கேரளாவில் இன்று முதல் 5 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கர்நாடகாவில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும், நாளை முதல் 4 நாட்கள் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது.
The post வங்கக்கடலில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.