×

கூடலூர் அருகே பரபரப்பு தாயை கடித்ததால் ஆத்திரம் நாயை கொன்ற மகன் கைது

கம்பம் : கூடலூர் அருகே தாயை கடித்த நாயை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.தேனி மாவட்டம், கூடலூர் அருகே கருநாக்கமுத்தன்பட்டி இந்திரா காலனியைச் சேர்ந்தவர் கிரண் (26). தேங்காய் வெட்டும் தொழிலாளியான இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன் நடந்த கொலை வழக்கில் கைதாகி தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார். நேற்று முன்தினம் கிரண் தனது டூவீலரில் சென்று கொண்டிருந்தபோது, ரோட்டில் சுற்றி திரிந்து கொண்டிருந்த நாயை பிடித்து தரையில் அடித்துக் கொன்றுள்ளார்.

இதனை தட்டிக் கேட்ட அப்பகுதி மக்களை கத்தியை காட்டி மிரட்டி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் கூடலூர் வடக்கு போலீசார், கிரணை கைது செய்து விசாரித்தனர்.விசாரணையில், கிரண் சிறைச்சாலையில் இருக்கும்போது அவரது தாயை தெருநாய் கடித்ததாகவும், பழி வாங்குவதற்காக அதே தெருநாயை தேடி கண்டுபிடித்து கிரண் அடித்துக் கொன்றதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.தாயை கடித்த நாயை மகன் அடித்துக்கொன்ற சம்பவம் கூடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கூடலூர் அருகே பரபரப்பு தாயை கடித்ததால் ஆத்திரம் நாயை கொன்ற மகன் கைது appeared first on Dinakaran.

Tags : Kudalur Kampam ,Kudalur ,Kiran ,Indira Colony ,Karunakkamuthanpatti ,Kudalur, Theni district ,
× RELATED 2வது திருமணம் செய்து உதாசீனம்: கணவர் வீடு முன் குழந்தைகளுடன் மனைவி தர்ணா