விருதுநகர், ஜூலை 27: திருச்சுழி அருகே அரசு டவுன்பஸ்சில் பெண்களை ஏற்ற மறுத்த டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் இருந்து காரைக்குளம் நோக்கி மகளிர் இலவச பயண அரசு பஸ் நேற்று முன்தினம் வந்தது. இதில் ஏறுவதற்காக பள்ளிமடம் ஸ்டாப்பில் நூறுநாள் வேலைக்குச் செல்லும் பெண்கள் மண்வெட்டி, தட்டு ஆகியவற்றுடன் காத்திருந்தனர். ஆனால் டிரைவரும், கண்டக்டரும் பெண்களை ஏற்றாமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், பஸ் காரைக்குளம் சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்தபோது டிரைவர், கண்டக்டரை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இது குறித்து அரசு போக்குவரத்து கழக மாவட்ட மேலாளர் துரைசாமி விசாரணை நடத்தினார். இதையடுத்து ஓட்டுநர் சிவக்குமார், நடத்துநர் பாலகிருஷ்ணன் ஆகியோரை மேலாளர் துரைசாமி தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
The post பஸ்சில் பெண்களை ஏற்ற மறுத்த டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.