×

கடமலையில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வருசநாடு, ஜூலை 27: தேனி மாவட்டம் கடமலைக்குண்டு கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு செயலாளர் போஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அண்ணாமலை ஆர்ப்பாட்டத்தில் கொண்டார்.

ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே உச்சரிக்கப்படாததன் வாயிலாக ஒன்றிய அரசின் சிந்தனையிலேயே தமிழகம் இல்லை எனவும், நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் தெரிவித்தனர். ர்ப்பாட்டத்தில் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில். ராஜாராம், தங்கப்பாண்டி, முருகன், பாண்டி, பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கடமலையில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Kadamalai ,Varusanadu ,Marxist Communist Party ,Kadamalaikundu ,Theni district ,Communist Party Union Committee ,Bose ,District Secretary ,Annamalai ,Dinakaran ,
× RELATED கொலிஜியம் பரிந்துரைப்படி நீதிபதிகளை...