×

ஆழ்குழாய் கிணற்றுக்கு மின் இணைப்பு வழங்கக்கூடாது

 

திருப்பூர், ஜூலை 27: அலகுமலை ஊராட்சி ராமம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: ராமம்பாளையத்தில் 250 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களது பகுதியில் பிஏபி வாய்க்காலுக்கு அருகில் உள்ள ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வந்தது. தற்போது அதன் அருகில் பிஏபி வாய்க்காலுக்கு 110 மீட்டர் தொலைவில் அலகுமலையில் 81 சென்ட் உள்ள விவசாய நிலத்தை உகாயனுர் காட்டுப்பாளையத்தை சேர்ந்த சிலர் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் தண்ணீரை கொண்டு செல்லும் 2 பைப் லைன்களுக்கும் ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் எந்த அனுமதியும் பெறவில்லை. எனவே 250 குடும்பங்களின் குடிநீரை காப்பாற்ற வேண்டும். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  எங்களுக்கு குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆழ்குழாய் கிணற்றுக்கு மின் இணைப்பு வழங்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

The post ஆழ்குழாய் கிணற்றுக்கு மின் இணைப்பு வழங்கக்கூடாது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Alakmalai ,panchayat ,Ramambalayam ,PAP ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மாநகரில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீர்