×

இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் செல்வராஜ் எம்எல்ஏ திறந்து வைத்தார்

 

திருப்பூர், ஜூலை 27: திருப்பூர் அர் ரஹ்மான் சேவைக்குழு அறக்கட்டளை சார்பில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மைய திறப்பு விழா காதர்பேட்டையில் நடைபெற்றது. அறக்கட்டளை தலைவர் சலீம் தலைமை தாங்கி பேசினார். இதனை செல்வராஜ் எம்எல்ஏ திறந்து வைத்தார்.இதில் மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அறக்கட்டளையால் இலவசமாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதனை மாணவிகள் பயன்படுத்திக்கொண்டு பயன்பெறலாம் என அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

The post இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் செல்வராஜ் எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Computer Training ,Center ,Selvaraj ,MLA ,Tirupur ,Tirupur Ar Rahman Sevakuttu Foundation ,Kadarpet. Foundation ,President ,Saleem ,Selvaraj MLA ,training center ,Dinakaran ,
× RELATED வாழை 2 கண்டிப்பா எடுப்பேன் - Mari Selvaraj Emotional Speech at Vaazhai Success Meet