- ஐந்து சக்கர நாற்காலி
- போட்டி
- கோயம்புத்தூர்
- சக்கர
- நேரு ஸ்டேடியம், கோயம்புத்தூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பாண்டிச்சேரி
- கர்நாடக
- தெலுங்கானா
- ஐந்து சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டி
- தின மலர்
கோவை, ஜூலை 27: தென்மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டாம் ஆண்டு ஐவர் வீல்சேர் கூடைப்பந்து போட்டி கோவை நேரு ஸ்டேடியம் அருகே உள்ள மாவட்ட கூடைப்பந்து மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, தெலங்கானா மற்றும் கேரளா ஆகிய ஐந்து மாநில அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் தமிழ்நாடு அணியுடன் கர்நாடகா அணி மோதியது.
இதில் கர்நாடகா அணி 35-31 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் கேரளா அணியுடன் பாண்டிச்சேரி அணி மோதியது. இதில் பாண்டிச்சேரி அணி 17-15 புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் கர்நாடகா அணியுடன் கேரளா அணி மோதியது. இதில் கர்நாடகா அணி 30-22 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
நான்காவது போட்டியில் தெலங்கானா அணியுடன் தமிழ்நாடு அணி மோதியது. இதில் தெலங்கானா அணி 29-27 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. ஐந்தாவது போட்டியில், தெலங்கானா அணி 36-16 என்ற புள்ளிக்கணக்கில் கேரளா அணியை வென்றது. ஆறாவது போட்டியில் கர்நாடகா அணி 34-24 என்ற புள்ளிக்கணக்கில் பாண்டிச்சேரி அணியை வென்றது.
The post ஐவர் வீல்சேர் கூடைப்பந்து போட்டி appeared first on Dinakaran.