- சேதுபாவாஸ்திரம்
- பேராவூரணி
- ரெண்டாம்புலிக்காடு ஊராட்சி
- சேதுபாவாசத்திரம் ஒன்றியம்
- சட்டமன்ற உறுப்பினர்
- அசோகுமார்
- யூனியன் கமிட்டி
- ஜனாதிபதி
- முத்துமாணிக்கம்
- பட்டுக்கோட்டை தாசில்தார் சுகுமார்
- உதவி திட்ட அலுவலர்
- ரவிச்சந்திரன்
- முதலமைச்சர் திட்ட முகாம்
- சேதுபவாசத்திரம்
- தின மலர்
பேராவூரணி, ஜூலை 27: சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ரெண்டாம்புளிக்காடு ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. எம்எல்ஏ அசோக்குமார் தலைமை வகித்தார் .சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் முத்துமாணிக்கம், பட்டுக்கோட்டை தாசில்தார் சுகுமார், உதவித் திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
முகாமில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளித்தனர். எம்எல்ஏ அசோக்குமார் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு நூறுநாள் வேலைத்திட்ட அடையாள அட்டையை வழங்கி, அரசின் நலத்திட்டங்கள் குறித்து பேசினார்.முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சடையப்பன், நாகேந்திரன், அரசுத்துறை அலுவலர்கள், தலைமை பொதுக்குழு உறுப்பினர் தனபால், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
The post சேதுபாவாசத்திரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் appeared first on Dinakaran.