×

அரசு கலைக்கல்லூரியில் நினைவேந்தல் நிகழ்ச்சி கார்கில் போர் நினைவு தினம்

 

கருர், ஜூலை 27: 25வது கார்கில் போர் நினைவு தினத்தை முன்னிட்டு கரூர் அரசு கலைக் கல்லூரியில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.கல்லூரி முதல்வர் அலெக்ஸாண்டர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் படத்தின் முன்பு மெழுகு வர்த்தி ஏந்தி அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.இதனைத் தொடர்ந்து மரம் நடும் விழா நடைபெற்றது. பின்னர், 2ம் தமிழ்நாடு பட்டாலியனை சேர்ந்த ஹவில்தார் செந்தில்குமார், அரவக்குறிச்சி கலைக் கல்லூரி இணைப் பேராசிரியர் சுதா ஆகியோர் கலந்து கொண்டு, கார்கில் போரின் சிறப்புகள் குறித்து பேசினர். இதில், போர் குறித்த குறும்படமும் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வுகளில் கல்லூரி பேராசிரியர்கள், தேசிய மாணவர் படை அலுவலர் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

The post அரசு கலைக்கல்லூரியில் நினைவேந்தல் நிகழ்ச்சி கார்கில் போர் நினைவு தினம் appeared first on Dinakaran.

Tags : Kargil War Remembrance Day ,Govt Arts College ,Karur ,Government Arts College ,25th ,College ,Principal ,Alexander ,
× RELATED ஊட்டி அரசு கலை கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவு இறுதி கட்ட கலந்தாய்வு