- சர்வதேச கிரிக்கெட் மைதானம்
- கோயம்புத்தூர்
- கோயம்புத்தூர் கார்ப்பரேஷன்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சர்வேத்சா கிரிக்கெட் ஸ்டேடியம்
- கோவை.…
- மட்டைப்பந்து
- தின மலர்
கோவை: கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட 20.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய கோவை மாநகராட்சி கூட்டம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவையில் சர்வேத்ச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அனைத்து வசதிகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானம் உருவாக்க சுமார் 20 ஏக்கர் நிலம் தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து ஒண்டிபுதுார், பாரதியார் பல்கலைக்கழகம் அருகே உள்ள இடம் மற்றும் எல்என்டி பைபாஸ் அருகே உள்ள இடம், காந்திபுரம் மத்திய சிறை மைதானம் என நான்கு இடங்கள் கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அடையாளம் காணப்பட்டன. இதனையடுத்து கோவைக்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள திறந்தவெளி சிறை வளாகத்தில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்குரிய சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தார். இந்நிலையில், ஒண்டிப்புதூர் திறந்தவெளி சிறை மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடிடம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கீடு செய்ய கோவை மாநகராட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் விவரம்: கோவை தெற்கு தாலுகா சிங்காநல்லூர் கிராமம் க.ச.எண் 777 மற்றும் 778ல் மொத்தம் 20.72 ஏக்கர் நிலம் ‘அரசு புறம்போக்கு – திறந்தவெளி சிறைச்சாலை’ என்ற வகைப்பாட்டில் உள்ளது. இந்த நிலத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கும் வகையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு நில மாறுதல் செய்ய, கோவை மாநகராட்சியின் மாமன்ற தீர்மானம் கோரப்பட்டுள்ளது. மேற்படி நிலத்தை, நில மாறுதல் செய்ய மாநகராட்சியின் தடையின்மை சான்று வழங்க வேண்டும் என மாநகராட்சியின் நகரமைப்பு மற்றும் அபிவிருத்தி குழு ஏற்கனவே பரிந்துரைத்துள்ளது. அதை ஏற்று, மாமன்றத்தின் அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
The post கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டுவதற்கு 20.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியது appeared first on Dinakaran.