×

மேலவை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமிக்கு வாழ்த்து

பெங்களூரு: கர்நாடக சட்டமேலவை எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள சலவாதி நாராயணசாமிக்கு பாஜ எஸ்சி மோர்ச்சா நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். கர்நாடக சட்டமேலவை எதிர்க்கட்சி தலைவராக இருந்த கோட்டா சீனிவாசபூஜாரி, சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உடுப்பி-சிக்கமகளூரு தொகுதியில் போட்டியிட்டு வென்றதை தொடர்ந்து, மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதை தொடர்ந்த மூன்று மாதங்களாக மேலவை எதிர்க்கட்சி தலைவர் நியமனம் செய்யாமல் இருந்தது. மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடரின் போது, சட்டமேலவை தலைவராக தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சலவாதி நாராயணசாமியை பாஜ மேலிடம் நியமனம் செய்தது.

அதை தொடர்ந்து அவர் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கும் முன்னாள் துணைமுதல்வர் அஷ்வத் நாராயணாவுக்கும் கர்நாடக மாநில பாஜ எஸ்சி மோர்ச்சா பிரிவு மாநில செயலாளர் அனுமந்தப்பா, கோலார் மாவட்ட எஸ்.சி.மோர்ச்சா செயலாளர் பாபி சுரேஷ் உள்பட நிர்வாகிகள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

The post மேலவை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமிக்கு வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Leader of the ,Upper House ,Salavadi Narayanasamy ,Bengaluru ,BJP SC Morcha ,Karnataka Legislative Assembly ,Kota Srinivasapujari ,Lok Sabha ,Udupi-Chikkamagalur ,Upper ,House ,
× RELATED காங்கிரஸில் இன்று அதிகாரப்பூர்வமாக...