- காங்கிரஸ்
- மகாராஷ்டிரா
- மும்பை
- சிவசேனா
- ஏக்நாத் ஷிண்டே
- தேசியவாத காங்கிரஸ்
- அஜித் பவார்
- பாஜக
- மகா விகாஸ்
- அகாதி கூட்டணி
- மகாராஷ்டிரா சட்டமன்றம்
- தின மலர்
மும்பை: மகாராஷ்டிராவில் தற்போது சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே) தேசியவாத காங்கிரஸ்(அஜித் பவார்) மற்றும் பாஜ தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் குழு அமைத்துள்ளது. இந்த குழுவினர் மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா(உத்தவ் அணி) மற்றும் தேசியவாத காங்கிரஸ்(சரத் சந்திர பவார்) ஆகிய கட்சிகளின் தலைவர்களுடன் பேச உள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் வௌியிட்டுள்ள அறிக்கையில், “மாநில அளவிலான குழுவில் காங்கிரஸ் மாநில பிரிவு தலைவர் நானா படோலே, காங்கிரஸ் சட்டப்பேரவை குழு கட்சி தலைவர் பாலாசாகேப் தோரட், பேரவை எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேட்டிவார், முன்னாள் முதல்வர் பிரித்வி ராஜ் சவுகான் மற்றும் மூத்த தலைவர்கள் நிதின் ராவத், நசீம் கான், சதேஜ் பாட்டீல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அக்டோபரில் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த காங். குழு அமைப்பு appeared first on Dinakaran.