- பொருநை
- அருங்காட்சியகம்
- நெல்லி
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- பொருனை அருங்காட்சியகம்
- நெல்லா
- தொல்பொருளியல் திணைக்களம்
- நிதி அமைச்சர்
- மனித வள மேலாண்மை
சென்னை: நெல்லையில் ‘பொருநை அருங்காட்சியகம்’ திறப்பதற்கான பணிகள் தொல்லியல் துறை சார்பில் விரைந்து முடிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். “மரபு நம் உரிமை; அதை மீட்டெடுத்தல் தமிழர் தம் கடமை” என்று நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சமூக வலைத்தளப்பதிவை மேற்கொள்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவு: தூங்காநகருக்கு மேலும் எழில்கூட்டிடும் வகையில் திருமலை நாயக்கர் அரண்மனை ஒளிர்கிறது. கண்களைக் கவர்கிறது. சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் அதிகம் காணும் பகுதிகளாக கீழடியும், இந்த அரண்மனையும் திகழட்டும். இவற்றைப் போலவே, நெல்லையில் ‘பொருநை அருங்காட்சியகம்’ திறப்பதற்கான பணிகள் தொல்லியல் துறை சார்பில் விரைந்து முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post நெல்லையில் ‘பொருநை அருங்காட்சியகம்’: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.