×

கர்நாடக நிலச்சரிவு: உயிரிழந்த ஓட்டுநர் சரவணனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

பெங்களூரு: கர்நாடக நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த ஓட்டுநர் சரவணனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்த சரவணனின் குடும்பத்திற்கு கர்நாடகா அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் தரப்பட்டது. கர்நாடகாவில் இருந்து நாமக்கல்லுக்கு சரவணனின் உடலை கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த 16இல் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக டேங்கர் லாரி ஓட்டுநர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 3 பேரில் சின்னண்ணன், கிருஷ்ணகிரியை சேர்ந்த முருகனின் உடல்கள் ஏற்கெனவே கொண்டு வரப்பட்டன.

 

The post கர்நாடக நிலச்சரிவு: உயிரிழந்த ஓட்டுநர் சரவணனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : KARNATAKA ,SARAVAN ,Bangalore ,Saravanan ,Karnataka government ,Namakkal ,
× RELATED மதுராந்தகம் அருகே விசாரணைக்கு வந்த மாணவனை தாக்கியதாக புகார்..!!