×

எடையூர் கிராமத்தில் 11 ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் குவிந்த பொதுமக்கள்

*எம்எல்ஏ துவக்கி வைத்தார்

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை அடுத்த எடையூர் கிராமத்தி்ல் 11 ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனர். முகாமை துவக்கி வைத்த எம்எல்ஏ மாரிமுத்து பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கினார்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர் தனியார் திருமண மண்டபத்தில் வேப்பஞ்சேரி, கள்ளிக்குடி, பாண்டி, ஆரியலூர், எடையூர், மாங்குடி, மருதவனம், ஓவரூர், சங்கேந்தி, வடசங்கேந்தி, வங்கநகர் ஆகிய 11ஊராட்சிக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. வட்டார வேளாண்மை விற்பனை குழுத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார்.
மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் அமுதா மனோகரன், தமயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து துவக்கி வைத்தார்.

இம்முகாம்களில் மின்சார வாரியம், வருவாய்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூகநலத்துறை, சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட தொழில்மையம், தொழிலாளர் நலத்துறை ஆகிய 15துறைகளைச் சேர்ந்த 44 சேவைகளை 8 கவுண்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு விரைவாக வழங்கிடும் பொருட்டு இந்த முகாம் நடைபெற்றது.

இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்கள் மூலம் வழங்கினர். முகாமில் 2024-25ம் நிதியாண்டிற்கு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பயனாளிகளே கட்டிக்கொள்வதற்காக நிர்வாக அனுமதிக்கான ஆணை 67 பயனாளிகளுக்கு வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு மனுக்கான தீர்வு ஆணைகள் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் தமிழ்மணி, மன்னார்குடி கோட்டாட்சியர் கீர்த்தனாமணி, வட்டாட்சியர்கள் முத்துப்பேட்டை குணசீலி, திருத்துறைப்பூண்டி காரல்மார்க்ஸ், வட்ட வழங்கல் அலுவலர் வசுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாலதி, வெற்றியழகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முருகையன், ஒன்றிய கவுன்சிலர்கள் சுமதி முருகையன், யசோதா, ராஜா, தேவகி துரையரசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் டிஜி.ராஜேந்திரன், ராஜா, கணேசன், மணிகண்டன், ராதிகா கணேஷ்குமார் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் துணை தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய மேலாளர் லெனின், உதவி வேளாண்மை அலுவலர் திவ்யா, வட்டார மருத்துவ அலுவலர் கிள்ளிவளவன், சுகாதார ஆய்வாளர் பழனியப்பன் உள்ளிட்ட அனைத்துறை அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post எடையூர் கிராமத்தில் 11 ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் குவிந்த பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : CM ,Udayur ,MLA ,Muthupet ,Marimuthu ,Udaayur village ,Dinakaran ,
× RELATED திருவேற்காடு நகர திமுக பொது...