*சித்தூரில் போலீசார் அதிரடி
சித்தூர் : சித்தூர் மாவட்டத்தில் சித்தூர் மண்டலம், குடிபாலா மண்டலம், யாதமரி மண்டலம், தவனம் பள்ளி மண்டலம் உள்ளிட்ட மண்டலங்களில் வெளி மாநில மது பாட்டில்கள் மற்றும் சட்ட விரோதமாக விற்பனை செய்த நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தது. அவற்றை அழிக்க முடிவு செய்து நேற்று சித்தூர் குடியாத்தம் நெடுஞ்சாலையில் பெருமாள் பள்ளி கிராமம் அருகே பெருமாள்பள்ளி கிராமத்தின் காலி இடத்தில் கொட்டினர்.
பின்னர் ரோடு ரோலர் கொண்டு போலீசார் முன்னிலையில் மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டது. இதுகுறித்து நகர டிஎஸ்பி ராஜகோபால் ரெட்டி கூறியதாவது: சட்டவிரோதமாக மதுபானம் 40 வழக்குகள், தவனம் பள்ளி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 8 வழக்குகள் மற்றும் குடிபாலா காவல் நிலையத்துக்கு உட்பட்ட 15 வழக்குகள் உள்பட- மொத்தம் 116 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
அதில் 68 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் சித்தூர் குடியாத்தம் நெடுஞ்சாலையில் பெருமாள் பள்ளி கிராமம் அருகே பெருமாள்பள்ளி கிராமத்தின் காலி இடத்தில் ரோடு ரோலர் கொண்டு மது பாட்டில்களை அழிக்கப்பட்டது. இதில் 3240 லிட்டர் மதுபானம், 1258 லிட்டர் நாட்டு சாராயம் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்பி மணிகண்டா உத்தரவின் பேரில் ₹27 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் அழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதில் சித்தூர் மேற்கு வட்ட ஆய்வாளர் ரவிசங்கர் ரெட்டி, எஸ்இபி, ஏஇஎஸ் ரவி, யதமரி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராமாஞ்சநேயுலு, தவனம்பள்ளி சப் இன்ஸ்பெக்டர் அனில் குமார், குடிபாலா சப் இன்ஸ்பெக்டர் நரேந்திரகுமார் மற்றும் ஏராளமான போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
The post சட்ட விரோதமாக விற்பனை செய்த ₹27 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் ரோடு ரோலர் கொண்டு அழிப்பு appeared first on Dinakaran.