- வருசநாத்
- வருணநாடு
- தேனி மாவட்டம்
- யூனியன் கமிட்டி
- ஜனாதிபதி
- சித்ரா சுரேஷ்
- மாவட்ட கலெக்டர்
- ஷாஜிவானா
- Varusanad
- தின மலர்
வருசநாடு, ஜூலை 26: தேனி மாவட்டம் வருசநாடு கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட மாவட்ட அளவிலான சிறப்பு முகாம் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் சித்ரா சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஷஜீவனா பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட வருவாய் ஆய்வாளர் ஜெயபாரதி, பெரியகுளம் கோட்டாட்சியர் முத்துமாதவன், மாவட்ட திட்ட இயக்குனர் ஆபிதாஷனிப், வருசநாடு ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, தும்மக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் பொன்னழகு சின்னக்காளை, தங்கம்மாள்புரம் ஊராட்சி மன்ற தலைவர் ராமுத்தாய் ராஜா, சிங்கராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ்,
முருக்கோடை ஊராட்சி மன்ற தலைவர் குருவம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்து அரசின் நல திட்டங்கள் குறித்து பேசினர். முகாமில், தோட்டக்கலை, வேளாண்மை, வருவாய், ஊரக வளர்ச்சி, மின்வாரியம், மருத்துவம், காவல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. ஆண்டிப்பட்டி தாசில்தார் கண்ணன், ஆணையாளர்கள் ஜெயபிரகாஷ், சிவக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், திமுக ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி, தங்கப்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post வருசநாட்டில் நடைபெற்ற சிறப்பு முகாமில் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.