×

காரைக்காலில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மழைக்கோட்

 

காரைக்கால்,ஜூலை 26: காரைக்காலில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மழைக்கோட்டை நாஜிம் எம்எல்ஏ வழங்கினார். காரைக்கால் மாவட்டம் தெற்கு தொகுதியில் அமைந்துள்ள முருகாத்தாளாச்சி மற்றும் கோவிந்தசாமி பிள்ளை அரசு பள்ளிகளில் புதுவை அரசால் இலவசமாக மாணவ மாணவிகளுக்கு மழை கோட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மழை கோட் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் காளிதாஸ் மற்றும் ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post காரைக்காலில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மழைக்கோட் appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Nazim ,MLA ,Puduvai Government ,Murugathalachi ,Govindasamy ,Pillai government ,Dinakaran ,
× RELATED நெடுங்காட்டில் மானிய விலையில் வேளாண்...