- வெளியுறவுத் துறை
- யூனியன் அரசு
- கேரள அரசு
- திருவனந்தபுரம்
- கேரள தொழிலாளர் நலன்
- ஐஏஎஸ்
- கே.வாசுகி
- வெளியுறவுத் துறை
- கேரள அரசின் மத்திய வெளியுறவு அமைச்சகம்
திருவனந்தபுரம்: கேரள தொழிலாளர் நலத்துறை செயலாளராக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரியான கே. வாசுகியை சமீபத்தில் கேரள அரசு வெளியுறவுத் துறை அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டது. கேரள அரசின் இந்த நடவடிக்கை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியது: வெளியுறவுத் துறை என்பது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வருவது அல்ல. எனவே தங்களது அதிகார வரம்பை மீறி மாநில அரசுகள் தலையிடக்கூடாது. கேரளாவின் நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
The post வெளியுறவுத் துறைக்கு அதிகாரியை நியமிப்பதா? கேரள அரசுக்கு ஒன்றிய அரசு கடும் கண்டனம் appeared first on Dinakaran.