×

சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்படும் 3 ஆண்டு எல்எல்பி மற்றும் ஹானர்ஸ் படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சட்டப் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் கவுரி ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் இணைவு பெற்றுள்ள அனைத்து சட்டக் கல்லூரிகள், சீர்மிகு சட்டப் பள்ளி ஆகியவற்றில் 3 ஆண்டு எல்எல்பி மற்றும் 3 ஆண்டு எல்எல்பி (ஹானர்ஸ்) சட்டப் படிப்பு நடத்தப்பட்டு வருகிறது. 2024-25ம் ஆண்டில் மேற்கண்ட படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நாள் வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu Dr. Ambedkar Law University ,Tamil Nadu ,Dr. Ambedkar Law ,Dinakaran ,
× RELATED சாலைகளில் திரியும் மனநலம்...