×

சென்னை இஎஸ்ஐ மருந்தகங்களில் அமைச்சர் கணேசன் திடீர் ஆய்வு

சென்னை: இ.எஸ்.ஐ. மருந்தகங்களில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் நேற்று திடீரென ஆய்வு செய்தார். தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் நேற்று காலை 7 மணி முதல் சென்னை, கொண்டித்தோப்பு மற்றும் சூளை பகுதிகளில் உள்ள இ.எஸ்.ஐ. மருந்தகங்களில் திடீர் ஆய்வு செய்தார். இந்த மருந்தகங்களின் காப்பாளர்கள் மொத்தம் 31 ஆயிரம் பேர் உள்ளனர். அமைச்சர், மருந்தகங்களுக்கு வந்த வெளி நோயாளிகளிடம் முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்தும், மருத்துவர்கள் பணியாளர்கள் உரிய நேரத்தில் வருகிறார்களா என்பது குறித்தும் கேட்டறிந்தார். அதுமட்டுமல்லாமல், போதுமான அளவில் மருந்துகள் இருப்பில் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டார். அப்போது, இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளின் இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

The post சென்னை இஎஸ்ஐ மருந்தகங்களில் அமைச்சர் கணேசன் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Minister Ganesan ,ESI ,Chennai ,C.V. Ganesan ,Minister ,Labor Welfare and Skill Development ,Tamil ,Nadu ,Minister of Labor Welfare and Skill Development ,C.V.Ganesan ,Ganesan ,
× RELATED உடல் நலக்குறைவால் காலமான ஞானபாரதி உடல், இஎஸ்ஐ மருத்துவமனைக்கு தானம்