×

காலியாக உள்ள கோவை மற்றும் நெல்லை மேயர் பதவிகளுக்கான தேர்தலை நடத்திட மாநில தேர்தல் ஆணையம் ஒப்புதல்

சென்னை: காலியாக உள்ள கோவை மற்றும் நெல்லை மேயர் பதவிகளுக்கான தேர்தலை நடத்திட மாநில தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. மாமன்றக் கூட்டத்தை கூட்டி மறைமுக தேர்தல் மூலமாக மேயரை தேர்ந்தெடுக்க, மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது காலியாக உள்ள திருநெல்வேலி மாநகராட்சி மேயர் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவியிடங்களை நிரப்பிடும் பொருட்டு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான மாநகராட்சிகளின் கூட்டங்களை நடத்தி மேயர்களைத் தேர்ந்தெடுத்திட உரிய அறிவுரைகளை தொடர்புடைய மாவட்ட தேர்தல் அலுவலர்கள் / மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

மேலும், ஆணையத்திற்கு ஏறிகனவே அறிக்கைகள் மூலம் தெரிவிக்கப்பட்ட ஏனைய நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள காலி பதவியிடங்களுக்கும் சேர்த்து மறைமுக தேர்தல்கள் நடத்துவதற்கான கூட்டங்களை நடத்தி அப்பதவியிடங்களை நிரப்பிட உரிய அறிவுரைகளை சம்மந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்கள் / மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

The post காலியாக உள்ள கோவை மற்றும் நெல்லை மேயர் பதவிகளுக்கான தேர்தலை நடத்திட மாநில தேர்தல் ஆணையம் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : State Election Commission ,Govai ,Nella ,Chennai ,Goa ,Dinakaran ,
× RELATED நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்ம மரண...