×

பேருந்து நிலையம், சந்தைகளில் 3-ம் பாலினத்தவருக்கு தனி கழிப்பிடம்: அரசு பதில் தர ஐகோர்ட் ஆணை

சென்னை: பேருந்து நிலையம், சந்தைகளில் 3-ம் பாலினத்தவருக்கு தனி கழிப்பிடம் அமைப்பது குறித்து அரசு பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் 3-ம் பாலினத்தவருக்காக பாலின சார்பற்ற கழிப்பிடம் அமைக்க கோரி ஃபிரெட் ரோஜர்ஸ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். பொது இடத்தில் ஏற்கனவே உள்ள மாற்றி திறனாளி கழிப்பிடங்கள் பாலின சார்பற்ற கழிப்பிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

The post பேருந்து நிலையம், சந்தைகளில் 3-ம் பாலினத்தவருக்கு தனி கழிப்பிடம்: அரசு பதில் தர ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Tags : iCourt ,Chennai ,Supreme Court ,Fred Rogers ,Dinakaran ,
× RELATED கால்நடைத்துறையில் பணி மூப்பு...