×

தமிழ்நாட்டில் இயங்கும் 1,500 பழைய பேருந்துகள் விரைவில் புதுப்பிக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர்

கும்பகோணம்: தமிழ்நாட்டில் இயங்கும் 1,500 பழைய பேருந்துகள் விரைவில் புதுப்பிக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கும்பகோணம் பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில், 23 புதிய பேருந்துகளை அரசு தலைமை கொறடா கோ.வி.செழியன், அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர், கும்பகோணம் சட்டமன்ற சாக்கோட்டை அன்பழகன், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் தமிழழகன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம்,கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சிவசங்கர்; தமிழ்நாட்டில் இயங்கும் 1,500 பழைய பேருந்துகள் விரைவில் புதுப்பிக்கப்படும். 7,200 புதிய பேருந்துகள் வாங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், 500 மின்சார பேருந்துகள் வாங்க திட்டமிட்டுள்ள நிலையில் 100 பேருந்துகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்துக்கு 200 புதிய பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

The post தமிழ்நாட்டில் இயங்கும் 1,500 பழைய பேருந்துகள் விரைவில் புதுப்பிக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister Sivashankar ,Kumbakonam ,Minister ,Sivasankar ,Kumbakonam Bus Station ,Tamil Nadu Government Transport Corporation ,Chief Whip ,K.V. Chezhiyan ,Dinakaran ,
× RELATED மழை முன்னெச்சரிக்கை – தமிழக அரசுக்கு, ஆளுநர் பாராட்டு