- மாநில அரசு
- NEET
- கர்நாடக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மேற்கு வங்கம்
- காங்கேயம் ஊராட்சி
- தமிழ்நாடு, மேற்கு வங்காளம்
கர்நாடகா: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தை தொடர்ந்து கர்நாடகத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக மாநிலஅரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஆட்சி புரிந்து வரும் காங்கிரஸ் அரசு தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக குரல் எழுப்பி வந்தது. தற்போது கர்நாடகா மாநிலத்தில் மழைக்கால கூட்ட தொடர் நடைபெற்று வருகிறது.
இரண்டாவது வாரமாக இந்த கூட்டத்தொடர் நடைபெறும் வரும் நிலையில் இன்று அவை நடவடிக்கை தொடங்கியவுடன் கர்நாடக சட்டப்பேரவை அமைச்சர் எச்.கே பார்ட்டில் நீட் எதிர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார். எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம். நீட் தேர்வில் இருந்து கர்நாடகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு விலக்கு அளிக்கவும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த தீர்மானம் கொண்டுவரும் போது பல்வேறு காரணங்களுக்காக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதியில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு புறம் பாஜக ஆர்ப்பாட்டம் செய்திருந்தாலும் மறுபுறம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்து தீர்மானத்தை நிறைவேற்றினர்.
முதற்கட்டமாக கீழ் அவையில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும் இரு நாட்களில் மேல் அவையிலும் இந்த தீர்மனம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு இதை ஆளுநருக்கு ஒப்புதலுக்காக அனுப்பிவைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.
The post தமிழ்நாடு, மேற்கு வங்கத்தை தொடர்ந்து கர்நாடகத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக மாநிலஅரசு தீர்மானம் நிறைவேற்றம்..!! appeared first on Dinakaran.