×

விமானக் கட்டணம் திடீர் உயர்வு: நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி!

டெல்லி: அடுத்த நொடியே எரர் சரியாக சென்னை டெல்லி விமானக் கட்டணம் ரூ.93,000 என்று உயர்த்திக் காட்டியதாக தயாநிதி மாறன் புகார் அளித்துள்ளார். சில வேளைகளில் ரூ.33,000 என்று முதலில் கணினி காட்டும் கட்டணம் திடீரென்று 78,000ஆக உயர்த்தப்படுவதாக குற்றச்சாட்டு. டாடா குழும நிறுவனமான விஸ்தாராவில் டி.சி.எஸ். மென்பொருளே ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுக்கு பயன்படுத்தப்படுகிறது. விமானப் பயணக் கட்டண பிரச்சனைகளை பயணிகள் விமானங்கள் ஒழுங்காற்று அமைப்பு தீர்ப்பதில்லை என்றும் தயாநிதி மாறன் புகார் தெரிவித்துள்ளார்.

 

The post விமானக் கட்டணம் திடீர் உயர்வு: நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி! appeared first on Dinakaran.

Tags : Thanidhi Maran ,Delhi ,Dayaniti Maran ,Err ,Chennai ,Tata ,
× RELATED சீதாராம் யெச்சூரி உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி!!