×

பிரதமர் அலுவலக குறைதீர் இணையத்தில் 12,000 புகார்கள் நிலுவை: ஜிதேந்திர சிங் தகவல்

டெல்லி: பிரதமர் அலுவலக இணையதளத்தில் 12,758 புகார் மனுக்கள் நடவடிக்கையின்றி நிலுவையில் உள்ளதாக மக்களவையில் ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு நிர்வாகத்தில் பல்வேறு துறைகளில் பொதுமக்கள் அளிக்கும் குறைகள், புகார்கள், www.pmindia.gov.in என்ற பிரதமர் அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் அறிக்கை அளித்தார்.

அப்போது பிரதமர் அலுவலக இணையதளத்தில் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையில் 80,513 புகார்கள் பதிவாகி உள்ளதாக அவர் தெரிவித்தார். இதில் 58,612 புகார்கள் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதில் 34,659 புகார்கள் கடந்த ஆண்டு பெறப்பட்டவை எனவும், மீதமுள்ள 12,758 புகார்கள் பிரதமர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளதாகவும், அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்திலேயே பொதுமக்களின் புகார்கள் நடவடிக்கை இல்லாமல் தேங்கி இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post பிரதமர் அலுவலக குறைதீர் இணையத்தில் 12,000 புகார்கள் நிலுவை: ஜிதேந்திர சிங் தகவல் appeared first on Dinakaran.

Tags : PM ,Jitendra Singh ,Delhi ,Union Associate Minister ,Lok Sabha ,Jidendra Singh ,Prime Minister's Office ,Union Government ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசின் உயர்பதவிகளில் நேரடி நியமன முறையை ரத்து செய்தது யு.பி.எஸ்.சி!