- புராவி
- அய்யனார் கோயில்
- குன்னம்
- அறந்தாங்கி
- அரந்தாங்கி
- அய்யனார் கோயில்
- குன்னம்
- வேலுவூர்
- ஆவுடையார் கோயில்
- வேலூர்
அறந்தாங்கி, ஜூலை 25: அறந்தாங்கி அருகே குன்னமுடைய அய்யனார், வெளுவூர் காளியம்மன் கோவில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார் கோவில் வெள்ளூர் காளியம்மன், குன்னம் முடைய அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.ஆண்டு தோறும் இந்த கோவிலில் புரவி எடுப்பு திருவிழா நடப்பது வழக்கம். இந்த புரவி எடுப்பு திருவிழா கொண்டாடுவதால் விவசாயம் நன்றாக செழிக்கும் இப்பகுதியில் உள்ளவர்கள் நோய் நொடி இல்லாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற புரவி எடுப்பு திருவிழாவில் கடந்த ஒரு வாரமாக விரதம் இருந்த பக்தர்கள் சுள்ளணி கிராமத்தில் உள்ள விநாயகர் கோவில் அருகில் மண்ணால் செய்யப்பட்ட குதிரை, காளைகளை மற்றும் பொம்மைகள் ஆகியவற்றிற்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்கள் குதிரைகளை தோளில் சுமந்தபடி 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவிலுக்கு கொண்டு வந்து சிலைஙளை வைத்து வழிபாடு செய்தனர்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
The post அறந்தாங்கி அருகே குன்னமுடைய அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா appeared first on Dinakaran.