×

30 ஆண்டுகள் சிறப்பான சேவை 10 காவலர்களுக்கு எஸ்எஸ்பி மணீஷ் பாராட்டு

 

காரைக்கால்,ஜூலை 25: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் காவல்துறையில் 30 ஆண்டுகள் பணி நிறைவு செய்துள்ள 10 காவலர்களை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மணிஷ் நேரில் அழைத்து பாராட்டினார்.புதுச்சேரி மாநில காவல்துறையில் கடந்த 30 ஆண்டுகளாக சிறப்பான சேவை செய்து வரும் 10 காவலர்கள் பாராட்டிச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி காரைக்கால் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்டத்தில் சிறப்பாக சேவை செய்து வரும்10 காவலர்களை காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் மணிஷ் நேரில் அழைத்து பாராட்டி சால்வை அணிவித்தார்.

The post 30 ஆண்டுகள் சிறப்பான சேவை 10 காவலர்களுக்கு எஸ்எஸ்பி மணீஷ் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : SSP Manish ,Karaikal ,Police Manish ,Puducherry ,Karaikal district ,Dinakaran ,
× RELATED காரைக்காலில் அரசு ஊழியர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்