×

ஆஸ்கர் விருது வாங்குவது முக்கியமில்லை: இயக்குனர் வெற்றிமாறன் பேச்சு

2023 ஆம் ஆண்டுக்கான தக்சின் மாநாடு இன்று சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடக்க விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர்கள் வெற்றிமாறன், ரிசப் ஷெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டில் வெற்றிமாறன் பேசும்போது; கலைக்கு மொழியில்லை எல்லைகள் இல்லை என்று கூறுவார்கள். ஆனால் கலைக்கு மொழி கலாச்சாரம் எல்லைகள் உள்ளது. கலையானது அதன் எல்லைக்குள் இருந்து செயல்படும்போது அது கடந்து போகும்.

லாக்டவுன் நேரத்தில் நாம் அனைவரும் வீட்டில் முடங்கி கிடந்தோம். என்ன பண்ணுவது என்று தெரியாமல் இருந்த நேரத்தில்தான் ஓடிடி தளங்களில் இருந்து எல்லா விதமான படங்களையும் பார்க்க தொடங்கினோம். அதன் மூலமாக அனைவருக்கும் வெவ்வேறு விதமான சினிமாவை பார்த்து அதைப்பற்றி புரிந்து கொள்வதற்காக ஒரு இடம் கிடைத்தது. லாக்டவுனுக்கு பிறகு தியேட்டருக்கு சென்று படம் பார்க்கத் தொடங்கினோம். கேஜிஎப், ஆர்ஆர்ஆர், காந்தாரா போன்ற படங்கள் பெரிய வெற்றி பெறுவதற்கு காரணம் அவை அனைத்துமே அந்த மக்களுக்காக எடுக்கப்பட்ட படங்கள்.

அவர்களுடைய கலாச்சாரம், நடிகர்கள் ஸ்டைலில் எடுக்கப்பட்ட படம், அதனால்தான் அந்த படங்கள் உலக அளவில் பிரபலமாகின . நம்முடைய கதைகளை நாம் சொல்லுகிறோம். ஆனால் அதற்கான உணர்வு எல்லை கடந்து ரீச் ஆகிறது. ஆஸ்கர் விருது வாங்குவது முக்கியமில்லை. நம் மக்களுக்கான படம் நாம் கொண்டாடுகிற படத்தை ஆஸ்கர் வரை கொண்டு சென்று அவர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால் அதனைதான் நான் ஒரு புரட்சியாக பார்க்கிறேன்.

The post ஆஸ்கர் விருது வாங்குவது முக்கியமில்லை: இயக்குனர் வெற்றிமாறன் பேச்சு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vavimaran ,Daksin Conference for 2023 ,Chennai ,Minister ,Udhayanidi Stalin ,Directors ,Vivimaran ,Risaf Shetty ,Vavimararan ,Vevimaran ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...