×

ஆதனக்கோட்டையில் சுண்ணாம்பு காலவாய் தொழில் காக்கப்படுமா?தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

கந்தர்வகோட்டை : ஆதனக்கோட்டை பகுதியில் நலிவடைந்து வரும் சுண்ணாம்பு காலவாய் தொழிலை காக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டை பகுதிகளில் சுண்ணாம்பு காலவாய் தொழிலில் சில குடும்பங்கள் பல தலைமுறையாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் பகுதிகளில் சுண்ணாம்புக்கல் கிடைத்துள்ள நிலையில் அதனை சேகரித்து சுண்ணாம்புக்கல்களை விறகுடன் கலந்து சுண்ணாம்புக் கால்வாயில் வேகவைத்து பிறகு அதனை பிரித்து எடுத்து பவுடராக மாற்றி வீடுகளுக்கு வெள்ளை அடிக்கவும் ,கட்டடங்கள் கட்டவும், கட்டிடங்களுக்கு மேலே யானைஅடி கல்பதியவும் பயன்படுத்தி வந்தனர். சுண்ணாம்பினால் கட்டிய கட்டடங்கள் வெயில் காலங்களில் குளிர்ச்சியாக இருக்கும் என குடியிருப்போர் தெரிவிக்கின்றனர்.தற்போது இந்த வகை சுண்ணாம்பு விவசாயப் பணிகளுக்கும் பயன்படுகிறது. கடலை, கத்திரி செடிகளில் விழும் வேர்க் கரையான் பூச்சி கடிக்கு மருந்தாகவும், கால்சியம் சத்து உள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள். மேலும் மாட்டுப் பண்ணை உரிமையாளர்கள் வந்து இந்த வகை சுண்ணாம்புகளை வாங்கிச் சென்று கால்சியம் சத்து குறைபாடு உள்ள கால்நடைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி கல்களை கழுவி ஊறவைத்து அந்த தண்ணீரை தீவனத்துடன் சேர்த்துக் கொடுப்பார்கள்.இதனால் மாடுகளுக்கு கால்சியம் சத்து கூடுவதாக கூறுகிறார்கள். மேலும் இந்தப் பகுதிகளில் சுண்ணாம்பு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் எங்கள் பகுதியில் உள்ள சுண்ணாம்புக் கற்களை தொழிலில் ஈடுபடுவோர் எடுத்து கொள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள்.இப்பகுதிகளில் இந்த தொழில் நலிவடைந்து வருகிறது என்று தெரிவிக்கிறார்கள். எங்களுக்கு தேவையான சுண்ணாம்பு கற்களை அரியலூரில் இருந்து வாங்கி வர வேண்டிய சூழ்நிலை இருப்பதக தெரிவிக்கின்றார்கள்….

The post ஆதனக்கோட்டையில் சுண்ணாம்பு காலவாய் தொழில் காக்கப்படுமா?தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Adanakotta ,Gandharvakottai ,Adanakottai ,Puthukottai ,Dinakaran ,
× RELATED அக்கட்சிபட்டி கிராமத்தில்...