×

இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர்கள் இடமாற்றம்

சென்னை: இந்து சமய அறநிலையத் துறையில் பணியாற்றும் இணை ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன் வெளியிட்ட அரசாணை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலின் இணை ஆணையராக பணியாற்றும் கல்யாணி திருச்சி இணை ஆணையராகவும், திருச்சி இணை ஆணையராக இருந்த பிரகாஷ், சமயபுரம் மாரியம்மன் கோயிலின் இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலின் இணை ஆணையராக பணியாற்றும் கார்த்திக், திண்டுக்கல் இணை ஆணையராகவும், திண்டுக்கல் இணை ஆணையராக பணியாற்றி வரும் பாரதி, சிவகங்கை இணை ஆணையராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் காஞ்சிபுரம் இணை ஆணையர் வான்மதி, சென்னை தலைமையிடம் இணை ஆணையராகவும் (சரிபார்ப்பு), மயிலாடுதுறை இணை ஆணையராக பணியாற்றும் மோகன சுந்தரம், விழுப்புரம் இணை ஆணையராக நியமனம் செய்யப்படுகின்றனர். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

The post இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர்கள் இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Hindu Religious Endowments Department ,CHENNAI ,Charities Secretary ,Chandramohan ,Hindu Religious Charities Department ,Secretary of ,Charities Department ,Samayapuram Mariamman temple ,
× RELATED திருவண்ணாமலையின் வரலாறு மற்றும்...