×

வேலை வாங்கி தருவதாக மோசடி உஷாராக இருக்க வேண்டும்: தெற்கு ரயில்வே எச்சரிக்கை

சென்னை: ரயில்வே வேலை மோசடிகளில் சிக்காமல் உஷாராக இருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போதுள்ள காலகட்டத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் ரயில்வே பணிகளில் சேர அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை பயன்படுத்தி பலர் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் இம்மாதம் மட்டும் சுமார் 30க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த மோசடி குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு தெரியவந்த நிலையில் பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வே சென்னை மண்டல மேலாளர் ஒரு பதிவை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் உண்மையான வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் ரயில்வே ஆள் சேர்ப்பு வாரியமான RRB மூலமாக மட்டுமே வெளியாகும் என்றும், எனவே ரயில்வே துறையில் வேலை இருப்பதாக கூறி பணம் கேட்கும் தனிநபர்கள் மற்றும் ஏஜென்சிகளை நம்ப வேண்டாம் என்றும், பொதுமக்கள் இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் உஷாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

The post வேலை வாங்கி தருவதாக மோசடி உஷாராக இருக்க வேண்டும்: தெற்கு ரயில்வே எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Southern Railway ,Chennai ,
× RELATED விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு...