×

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநரிடம் 3 மணி நேரத்துக்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநரிடம் 3 மணி நேரத்துக்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நலவழி மையங்களில் கர்ப்பிணிகளுக்கு தரமற்ற மருந்துகள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. தரமற்ற மருந்து வழங்கியதாக புகார் எழுந்ததை தொடர்ந்து மருந்தாளுநர் நடராஜன் பணியில் இருந்து நீக்கப்பட்டார். சுகாதாரத்துறை சிறப்புப் பணி அதிகாரி அளித்த புகாரில் மருந்தாளுநர் நடராஜனை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்தது.

The post புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநரிடம் 3 மணி நேரத்துக்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.

Tags : CBI ,Director of ,Health Department ,of ,Puducherry ,department ,
× RELATED மகாவிஷ்ணு விவகாரத்தில் நாளை மறுநாள்...