×

மஞ்சள் குவிண்டால் ரூ.10 ஆயிரத்தை நெருங்கியது-விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு :  ஈரோட்டில் மஞ்சள் ஏல விற்பனை ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், கூட்டுறவு சங்கங்கள் மூலம் வாரத்திற்கு 5 நாட்கள் நடக்கிறது. மஞ்சள் விலை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குவிண்டால் அதிகபட்சம் ரூ.7 ஆயிரம் என்ற விலையில் நீடித்து வந்தது. பின்னர் மஞ்சள் தேவை அதிகரித்ததால், மெல்ல உயர்ந்து தற்போது விரலி மஞ்சள் குவிண்டால் முதல் தரம் ரூ.9200 வரை விற்பனையாகிறது.தீபாவளி பண்டிகைக்கு பிறகு மட்டும் மஞ்சள் விலை குவிண்டால் ஒன்றுக்கு சராசரியாக ரூ.2,000 வரை உயர்ந்துள்ளது. மஞ்சள் ஏற்றுமதி அதிகரித்திருப்பதும், தமிழகம், கேரளாவில் பொங்கலுக்கு அரசு சார்பில், பரிசு பொருள் வழங்குவதற்காக மஞ்சள் கொள்முதல் செய்தது. தேசிய அளவில் மஞ்சளின் தேவை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரித்து வரும் பொங்கல் பண்டிகைக்குள் குவிண்டால் ரூ.10 ஆயிரத்தை எட்டும் வாய்ப்பு உள்ளது.இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் தொடர் மழையால் 40 சதவீத மஞ்சள் பயிர்கள் பாதித்துள்ளன. இதே போல தமிழகம் உள்பட மஞ்சள் சாகுபடி பரப்பளவும் குறைந்துவிட்டது. அதே வேளையில் மஞ்சள் ஏற்றுமதி, உள்நாட்டு தேவை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் மஞ்சள் விலை உயர்ந்து வருகிறது. பொங்கலுக்கு பிறகு மார்க்கெட்டுகளுக்கு புதிய மஞ்சள் வரத்து தொடங்கி விடும் என்பதால், பொங்கல் வரை இந்த விலையேற்றம் நீடிக்கும் வாய்ப்பு உள்ளது,’’ என்றனர்….

The post மஞ்சள் குவிண்டால் ரூ.10 ஆயிரத்தை நெருங்கியது-விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Yellow quintal ,Erode ,Yellow Auction ,Regulatory ,Erod ,Dinakaran ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...